உபி அமைச்சரவை விரிவாக்கம் 6 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

 

லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 6 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் கேபினட் அமைச்சர்களாக பூபேந்திர சவுத்ரி, மனோஜ் பாண்டே பதவியேற்றனர். மாநில அமைச்சர்களாக கிருஷ்ணா பஸ்வான்,சுரேந்திர திலேர்,ஹன்ஸ்ராஜ் விஷ்வகர்மா,கைலாஷ் ராஜ்புத் ஆகியோர் பதவியேற்றனர்.

உபியில் அடுத்தாண்டு சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு சமூக பிரிவினரை திருப்திபடுத்தும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உபி அமைச்சரவையின் அதிகபட்ச எண்ணிக்கை 60 ஆகும். விரிவாக்கத்திற்கு முன்னர் 54 பேர் அமைச்சரவையில் இருந்தனர். ஆறு இடங்கள் காலியாக இருந்தன.

 

Related Stories: