சென்னை: வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் இலவசமாகவும், 500க்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்கள் இலவசமாகவும் கணக்கிடப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 யூனிட் மின்சார மானிய திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,730 கோடி கூடுதல் செலவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
