தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை காலை கூடுகிறது

 

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்து அலுவல்களை தொடங்கினார். தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தலைமை செயலகம் சென்றடைந்தார். காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் விஜய். தற்காலிக சபாநாயகருக்கான உத்தரவில் கையெழுத்திட்டார். தற்காலிக சபாநாயகரை நியமனம் செய்து முதலமைச்சர் கையெழுத்திட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா முன்னிலையில் புதிதாக தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர். மே.12ம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் (MLAs) நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவர் விஜய், வரும் மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். உறுப்பினர்கள் பதவியேற்ற பிறகு, புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2026 தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ-க்களின் முதல் கூட்டம் என்பதால் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Related Stories: