நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு விழா

நாசரேத், மார்ச்1: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பொன்விழாவை முன்னிட்டு ரூ.1 கோடி மதிப்பிலான புதிய கட்டிடம் மற்றும் கல்லூரி நுழைவு வாயில் கட்டப்பட்டு  திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்து கட்டிடத்தை பிரதிஷ்டை செய்தார். கல்லூரி பாடகர் குழுவினர் பாடல் பாடினர். திருமண்டல லே செயலர் எஸ்.டி.கே. ராஜன் கல்லூரி நுழைவு வாயில் மற்றும் பொன்விழா புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். திருமண்டல கல்லூரிகளின் நிலைவரக்குழு செயலர் ஜெபச்சந்திரன் கருத்தரங்க அறையினை திறந்து வைத்தார்.

 கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை கல்லூரி வளர்ச்சிப்பணிகள் குறித்து விளக்க உரையாற்றி நினைவு பரிசு வழங்கினார். துணைமுதல்வர் பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்றார். நிகழ்ச்சிகளை பேராசிரியை பியூலாஹேமலதா தொகுத்து வழங்கினார். இதில் முன்னாள் எம்.பி. ஏ.டி.கே ஜெயசீலன், தூய யோவான் பேராலயதலைமைகுரு ஆண்ட்ரூவிக்டர், பிள்ளையன்மனைசேகர குரு ஆல்வின், நிலக்கிழார் தன்ராஜ், பொறியாளர் ஜேசுதாஸ், ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரிதாளாளர் சசிகரன், கல்லூரி நிதியாளர் குளோரியம் அருள்ராஜ், தமிழ்த்துறைதலைவர் அந்தோணிசெல்வகுமார் மற்றும்  பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்.

Related Stories: