குளித்தலை, மே 9: குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள இளநிலைப் பாடப்பிரிவுகளில் சேர மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
கரூர் மாவட்டம்குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் த. சுஜாதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு உயர்கல்வித்துறை கல்லூரிக் கல்வி ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில் டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள இளநிலைப் பாடப்பிரிவுகளான பி. ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிக நிர்வாகவியல், பி.காம் வணிகவியல், கணினி பயன்பாட்டியல், இளநிலை அறிவியல் பாடப் பிரிவுகளான பி.எஸ்சி கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ்,மின்னணுவியல் துறை இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் tngasa.in //tngasa.in/ என்ற இணைய தளத்தில் இம் மாதம் 29.5.2026 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
