கரூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா சண்டியாகம்

கரூர், மே. 16: ஆண்டுதோறும் கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான வைகாசி விழாவுக்கான கம்பம் நடும் விழா கடந்த 10ம்தேதி காலை நடைபெற்றது. தொடர்ந்து, 11ம்தேதி முதல் தினமும் கோயிலில் பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் கம்பத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து புனித ஊர் ஊற்றிச் செல்கின்றனர்.

இந்நிலையில், பூச்சொரிதல் விழாவுக்கு முன்னதாக நடைபெறும் சண்டி யாக பூஜை நேற்று காலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில்நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி த ரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பூச்சொரிதல் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

 

Related Stories: