ரேஷன்கடை குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்

கரூர், மே. 8: ரேஷன் கடை குறைதீர் கூட்டம் நாளை நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியபொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புசட்டம் 2013ன்படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க, குறை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது விநியோகத் திட்டதின் கீழ் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் வருகின்ற 9.5.2026 நாளை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் -2013 தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: