கோடைகாலத்தில் ஆடு, மாடு, கோழிகளை பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்

கரூர், மே. 8: கோடை வெப்பத்தில் இருந்து ஆடு. மாடு, எருமை, கோழி உள்ளிட்ட கால்டைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளதாவது:
கால்நடைகளுக்கு உயர் வெப்பத்தால் ஏற்படும் அயற்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறகது. அதிகமாக உமிழ்நீர் வடிதல், அதிகமாக தண்ணீர் பருகுதல், பகலில் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல், நிழலில் தஞ்சம் புகுதல், வாயை திறந்த நிலையில், வேகமாக சுவாசித்தல் போன்றவை வெப்ப அயற்சியின் அறிகுறிகளாகும்.

வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளை காப்பாற்றுவதற்கு கால்நடைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெயிலகுக முன்பும், பின்பும் மேய்ச்சலக்கு விட வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேய்ச்சலக்கு விடுவதை தவிர்க்க வேண்டும். கறவை மாடுகளுக்கு ஒரு நா£ளக்கு 4 முதல் 5 முறையாவது உகந்த தண்ணீர் கொடுக்க வேண்டும். எப்போதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் தொட்டியை அமைக்க வேண்டும்.

தண்ணீரின் மீது கலப்பு தீவனத்தை சிறிதளவு து£வும் போது கால்நடைகள் அதிக தண்ணீர் குடிக்கும் தாது உப்புக்கலவை, வைட்டமின்கள் கொடுப்பதன் மூலம் வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் உற்பத்தி குறையாமல் இருக்கும். நீர்தெளிப்பான்கள், மின் விசிறிகளை கொட்டகைகளில் பயன்படுத்துவதன் முலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம். கோடை காலத்தில் அதிகமாக பசுந்தீவனம் கொடுப்பதோடு, அவற்றுக்கு அளிக்கும் தீவனங்களை பல பிரிவுகளாக பிரித்து இடைவெளி விட்டு ஒரு நாளைக்கு 3 அல்லது 4 வேளைகளாக பிரித்து அளிக்கலாம்.ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். பொதுவாக கொடுக்காபுல், வாகை, சேம்பு, கருவேல், சூடாபுல், மா, பலா, ஆல், அகத்தி, அரசு போநந்ற மரங்களின் இலைகள் ஆடுகளுக்கு சிறந்த உணவாகும். கோடையில் கிடைக்கும் புரதச்சத்து மிக்க செல்வேல், கருவேல் உலர் காய்களை ஆடுகளுககு உணவாக கொடுக்கலாம். பருவ மழைக்காலங்களில் பசுந்தீவனம் அதிகமாக இருக்கும் போது அவற்றை ஊறுகாய் தீவனமாக மாற்றி சேமித்து அவற்றை ஆடுகளுககு தீவனமாக கொடுக்கலாம். வேளாண் உபபொருட்கள் அல்லது மர இலை அல்லது புண்ணாக்கினை தீவனமாக அளிக்கலாம்.

கோழிகளுக்கு விடியல்காலை பொழுதிலும், இரவிலும் தீவனம்அளிக்க வேண்டும். சுத்தமாக குடிநீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீரில் வைட்டமின்கள் பி.காம்ளக்ஸ், குளுக்கோஸ், கலந்து கொடுக்கலாம். அதிக இடவசதி உள்ள இடத்தில் உயரமாக கூரை அமைத்து குறைவான எண்ணிக்கையில கோழிகளை பராமரிக்க வேண்டும்.செல்ல பிராணிகளை காரில் உள்பகுதியில் அடைத்து வருவதையும், நேரடியாக வெயில் படுமாறு உலாவ விடுவதையும் தவிர்க்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளில் கால்நடைகளுக்கு தேவையான மருநந்துகள், தாது உப்புக் கலவைகள் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டள்ளன.

மேலும், கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமாயின் 1962 ஆம்புலன்ஸ் ஊர்திகள் மூலம் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: