லாலாப்பேட்டையில் சாரல் மழை

லாலாப்பேட்டை, மே 6:கரூர் மாவட்டம் லாலாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த சாரல் மழை காரணமாக குளிர்ச்சியடைந்தது. குளிர்ந்த சீதோசன நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கோடை காலத்தில் பாசன வாய்க்கால்களில் நீர் திறப்பு இல்லாத நிலையில் சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: