சென்னை: சென்னை கொரட்டூரில் மின்சார ரயிலில் சென்ற தமிழ்ச்செல்வி என்ற பெண் தவறவிட்ட 14 சவரன் நகைகளை ரயில்வே போலீசார் மீட்டுக்கொடுத்தனர். உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு கொரட்டூரில் இறங்கியபோது நகைப்பையை தவற விட்டுள்ளார். திருவள்ளூரில் நின்று கொண்டிருந்த ரயிலில் சோதனை செய்தபோது அங்கிருந்த பையை மீட்டு ரயில்வே போலீசார் தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனர்.
