தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம்

நாமக்கல், பிப்.26: நாமக்கல்-திருச்சி ரோட்டில் உள்ள தங்கம் மருத்துவமனை வளாகத்தில், சர்வதேச தரத்திலான தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம், 150 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன்,  மும்பை டாடா மெமோரியல் கேன்சர் மைய சிறப்பு இயக்குனர் டாக்டர் ராஜேந்திர  பத்வே, கோவை கட்டிடக்கலை நிபுணர் ரமணிசங்கர் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். நிர்வாக இயக்குனர் டாக்டர் குழந்தைவேல் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவர் மல்லிகா குழந்தைவேல், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சரவண ராஜமாணிக்கம், தீபன் ராஜமாணிக்கம், கார்த்திக் ராஜமாணிக்கம், தீப்தி மிஸ்ரா, சுபா, பாவேஷ், அருணா பிரபு, கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து டிரினிடி மகளிர் கல்லூரியில் ₹10 கோடியில் கட்டப்பட்டுள்ள அறிவியல் அரங்கத்தை, டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திறந்து வைத்தார். இதில், நாமக்கல் தமிழ்ச்சங்கம் சார்பில், ‘தரணி போற்றும் தமிழர்’ என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது.

Related Stories:

>