வாக்கு எண்ணிக்கையின் போது கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாளை மறுதினம் (நாளை) தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் இடங்களில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் விழிப்போடு, பொறுப்போடு பணியாற்ற வேண்டும்.

தமிழகத்தை வளர்ச்சிப்பாதையிலே அழைத்துச் செல்லக்கூடிய நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் பணி வளமான தமிழகம் ஏற்பட வழிவகுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் தங்கள் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து பொறுப்போடு பணியாற்ற வேண்டும்.

Related Stories: