விசைத்தறி தொழிலாளி தற்கொலை

பவானி, பிப்.26: சித்தோடு அருகே உள்ள நசியனூர், சாமிகவுண்டன்பாளையம், மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (63). விசைத்தறி தொழிலாளி. நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் மதுக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தம்பதிக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டைவிட்டு வெளியே சென்ற குழந்தைசாமி,குருணை மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதைக் கண்ட உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தைசாமியை சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

Related Stories:

>