சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,000க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று காலை, மாலை என அதிரடியாக பவுனுக்கு ரூ.1440 குறைந்தது. இதே போல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிந்தது. தங்கத்தின் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாரம் இறுதிநாளான நேற்று தங்கம் விலை மீண்டும் மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,050க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,400க்கும் விற்பனையானது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நேற்று காலையில் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று மாலையும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.13,920க்கும், பவுனுக்கு ரூ.1040 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11, 360 குறைந்தது. இதன் மூலம் வெள்ளி விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.1440 குறைந்தது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதே நேரத்தில் மாலையில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: