சென்னை: சென்னையில் பயணிகளுக்கான வசதியை கருத்தில் கொண்டு, மெட்ரோ நிர்வாகம் நாளை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அட்டவணைப்படி ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி அதிகபட்ச பயணிகள் வரும் நேரமான பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை, 7 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதன் மூலம் வேலை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக பயணம் செய்பவர்கள் எளிதாகவும் விரைவாகவும் பயணிக்க முடியும். அதேபோல், காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும்.
மேலும், இரவு நேர பயணிகளுக்காக, இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ சேவை வழங்கப்படும். இந்த மூலம் பயணிகள் நெரிசலை கட்டுப்படுத்துவதோடு, சீரான மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்க மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த அட்டவணையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
