திருவனந்தபுரம்: கேரளாவில் சமீப காலமாக அமீபா மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. அசுத்தமான தண்ணீர் மூலம் தான் இந்த நோய் பரவுகிறது. திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த நோய் பாதித்து பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஆலப்புழா அருகே உள்ள அம்பலப்புழாவைச் சேர்ந்த விஜயன் என்பவரின் மகள் ஆர்யாவுக்கு (26) கடந்த மாதம் அமீபா மூளைக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இதைத்தொடர்ந்து அவருக்கு ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின்னர் ஆர்யா உடல்நலம் தேறினார். இந்நிலையில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை யடுத்து ஆர்யா நேற்று இவர் உயிரிழந்தார்.
