அசாம் முதல்வர் மனைவி மீது குற்றச்சாட்டு காங். மூத்த தலைவர் பவன் கேராவுக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன்

புதுடெல்லி: அசாம் முதல்வர் சர்மாவின் மனைவி பல பாஸ்போர்ட்களை வைத்திருப்பது தொடர்பாக குற்றம்சாட்டிய விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்கேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி பல நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பதாகவும், வெளிநாடுகளில் அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்கேரா குற்றம்சாட்டினார். இந்நிலையில் அவருக்கு எதிராக சர்மாவின் மனைவி புகார் அளித்தார். புகாரின்பேரில் கேரா மீது அசாம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் பவன் கேரா முன்ஜாமீன் பெற்ற நிலையில் அதற்கு தடை விதித்ததோடு கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தை அணுகும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கவுஹாத்தி உயர்நீதிமன்றம் பவன்கேராவின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதனை தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகஸே்வரி மற்றும் சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பான தனது உத்தரவை நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: