வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு கேரளாவில் 6ம் தேதி ஓட்டல்கள் மூடப்படும்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியதை கண்டித்து கேரளாவில் வரும் 6ம் தேதி ஓட்டல்களை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படும் என்று பரவலாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முதல் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிலிண்டரின் விலை 3 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு வர்த்தக எரிவாயு பயன்படுத்தும் ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. இதைத் தொடர்ந்து எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் வரும் 6ம் தேதி ஓட்டல்களை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Stories: