தவெக தலைவர் விஜய் தனி விமானத்தில் ஷீரடி பயணம்

சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் ஷீரடி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும், சுட்டெரிக்கும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள், தேர்தலுக்கு பிறகு, ஓய்வெடுப்பதற்காக சுற்றுலா தளங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தொடர்ச்சியாக கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட விஜய், நேற்று முன்தினம் அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று காலை 11.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ஷீரடி புறப்பட்டு சென்றார்.
ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு விஜய் சென்று வழிபட்டுள்ளார்.

 

Related Stories: