லாரி உரிமையாளர்களுடன் இன்று கலந்துரையாடல்

நாமக்கல், பிப்.25: நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், இன்று(25ம் தேதி) மாலை 4 மணிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், லாரி உரிமையாளர்களுடன் கலந்துரையாடுகிறார். இதில் நாமக்கல் எம்பி சின்ராஜ், லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வாங்கிலி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, லாரி உரிமையாளர்களை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து தொழிலில் உள்ள பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிகிறார்கள். கடந்த வாரம், திமுக எம்பி கனிமொழி லாரி உரிமையாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>