காங். செயல் வீரர்கள் கூட்டம்

நாமக்கல், பிப்.25: நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், நாளை(26ம் தேதி) காலை 11மணிக்கு ராசிபுரம் ரோட்டரி ஹாலில், ராசிபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டமும், மாலை 5 மணிக்கு நாமக்கல் கவின் கிஷோர் மண்டபத்தில் நாமக்கல், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டமும் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி சுகந்தன் கலந்து கொள்கிறார். கூட்டத்தில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு மாவட்ட தலைவர் சித்திக் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>