உப்பாற்று ஓடையில் முதியவர் சடலம் மீட்பு

தூத்துக்குடி, ஏப். 29: தூத்துக்குடி அருகே உப்பாற்று ஓடையில் முதியவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை பைபாஸ் மேம்பாலத்தின் அருகேயுள்ள உப்பாற்று ஓடையில், முதியவர் சடலம் சேற்றில் சிக்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை போலீசார், முதியவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபருக்கு சுமார் 75 வயது இருக்கும் எனத் தெரிகிறது. அவரது உடலில் காயங்கள் ஏதுமில்லை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டன்விளையில் பால்குடம் பவனி உடன்குடி, ஏப். 29: பரமன்குறிச்சி அருகே உள்ள வட்டன்விளை முத்தாரம்மன் கோயிலில் சித்திரை கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி கடந்த ஏப்.26ம் தேதி காலை 9 மணிக்கு விமான அபிஷேகம், காலை 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. மறுநாள் இரவில் திருவிளக்கு பூஜை, அம்மன் சப்பர பவனி நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு பால்குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடந்தது. இன்று (29ம் தேதி) மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா வருதல், இரவில் கரகாட்டம், மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சப்பரத்தில் பவனி வருதல், நாளை காலையில் கொடை விழா நிறைவு பூஜை நடக்கிறது.

Related Stories: