திருத்துறைப்பூண்டி,ஏப்.29: திருத்துறைப்பூண்டி அருகே கோடை உழவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர், ஆட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசாக மழை பெய்தது. இதன் காரணமாக வயல்கள் ஈரப்பதத்துடன் இருப்பதால் தற்போது விவசாயிகள் டிராக்டர் கொண்டு கோடை உழவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
