வடமதுரை அருகே டூவீலர்கள் மோதல்: வாலிபர் பலி: 3 பேர் படுகாயம்

வடமதுரை, ஏப். 29: வடமதுரை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர். சாணார்பட்டி அருகேயுள்ள வீரசின்னம்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (26). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவருடன் டூவீலரில் அதிகாரிபட்டி – காணப்பாடி சாலையில் சென்று கொண்டிருந்தார். காணப்பாடி அருகே காளவாசல் பகுதியில் வந்த போது இவர்கள் சென்ற டூவீலரும், எதிரே மாலப்பட்டியை சேர்ந்த கார்த்திக், சுந்தரமூர்த்தி ஆகியோர் வந்த டூவீலரும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த சரவணக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கஜேந்திரன், கார்த்திக், சுந்தரமூர்த்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: