கோவில்பட்டி, ஏப். 29: கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சுயநிதிப் பாடப் பிரிவுகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவுபசார விழா நடைபெற்றது. கல்லூரி செயலர் மகேந்திரன் தலைமை வகித்தார். முதல்வர் சுப்புலெட்சுமி, சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் மகேஸ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொது நிகழ்ச்சிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அனுசுயாதேவி வரவேற்றார். துறைத் தலைவர்கள் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிப் பேசினர். 3ம் ஆண்டு மாணவ- மாணவியர் ஏற்புரை வழங்கினர். தொடர்ந்து மாணவ -மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொது நிகழ்ச்சிக் குழு உறுப்பினர் கணினிப் பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் சிவசக்தி நன்றி கூறினார்.
கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் மாணவர்களுக்கு பிரிவுபசார விழா
- ஜிவிஎன் கல்லூரி
- கோவில்பட்டி
- ஜி.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி
- கல்லூரி செயலாளர்
- மகேந்திரன்
- சுப்புலேக்ஷ்மி
- மகேஷ்குமார்
