சப்போட்டாவின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

சப்போட்டா பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதை தொடர்ந்து சாப்பிட்டு வர செரிமானத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், சரும ஆரோக்கியம், எலும்பு வலுவூட்டல் மற்றும் உடனடி ஆற்றலை வழங்குதல் போன்ற எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. நார்ச்சத்து, விட்டமின்கள் ஏ,சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ள இது, ரத்த அழுத்தத்தைச் சீராக்கவும், கண் ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவோர்களுக்கு, புற்றுநோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் கணிசமாக இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தும். இதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கலைத் தடுத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சப்போட்ட பழத்தில் இயற்கை சர்க்கரைகள் (Glucose, Fructose) நிறைந்துள்ளதால், சப்போட்டா சாப்பிட்ட உடனே உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் தருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு: கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் மயக்கத்தைக் குறைத்து, உடனடி ஆற்றலை வழங்குகிறது. மூலநோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக ரத்தமூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து. சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள், ரத்த நாளங்களை சீராக்கி கொழுப்பு படிவத்தை தடுக்கும். ஆரம்ப நிலை காசநோய் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழக்கூழ் குடிக்க கொடுத்து வர, காசநோய் குணமாகும்.

கொலஸ்டிரால் பிரச்னை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினமும் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.சப்போட்டா கூழுடன், எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.

பித்தத்தைப் போக்கும் தன்மை சப்போட்டா பழத்துக்கு உண்டு.சப்போட்டாவை சாப்பிட்ட பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் குறையும். பித்த மயக்கத்தையும் கட்டுப்படுத்தும். சப்போட்டாவை ரெகுலராக சாப்பிட்டு வர மேனி பளபளப்பாக மாறும்.

சப்போட்டா கூழுடன் சிறிது சுக்கு. சித்தரத்தையை பொடித்து, கொஞ்சம் கருப்பட்டியையும் பொடித்து நன்றாகக் காய்ச்சிக் குடித்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும். கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் தாகத்தை தணிக்கும் தன்மை சப்போட்டாவுக்கு உண்டு.தூக்கமின்னையால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கைக்கு முன் ஒரு டம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடிக்க, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.நன்கு பழுத்த சப்போட்டா பழங்களை மட்டுமே உண்ண வேண்டும். சப்போட்டாவில் சர்க்கரை அதிகம் உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

தொகுப்பு:- மகாலட்சுமி சுப்ரமணியன்