வேலூர் மாவட்டத்தில் வருவாய் அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் ஒரு வாரமாக பணிகள் பாதிப்பு ஏமாற்றத்துடன் திரும்பும் ெபாதுமக்கள்

வேலூர், பிப்.25: வேலூர் மாவட்டத்தில் வருவாய் அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஒரு வாரமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வுக்கு உத்தரவாதம் கோரியும், அரசு ஊழியர் ஓய்வுக்காலம் பாதுகாத்திடவும், குடும்ப பாதுகாப்பு நிதியை ₹10 லட்சமாக உயர்த்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கடந்த 17ம் தேதி தொடங்கினர். அதன்படி நேற்றும் வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய தாலுகா அலுவலகம் மற்றும் வேலூர், குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஒற்றை எண்ணிகையில் மட்டுமே பணிக்கு வந்து இருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் எம்எச் பிரிவில் பணியாளர்கள் யாரும் வரவில்லை. இதனால் வருவாய் துறை அலுவலகங்கள் வெறிச்சோடியது. கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக பல்வேறு கோரிக்கை குறித்த மனுக்களுடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories: