3 மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் 30ம் தேதி முதல் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் ஒருசில இடங்களில் இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியஸ் உயர்ந்தும், பிற இடங்களில் இயல்பை ஒட்டியும் இருந்தது. சென்னை, கோவை, நீலகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பநிலை இருந்தது. கரூர், வேலூர் பகுதிகளில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில், மத்திய பிரதேசத்தின் மத்தியப் பகுதிகள் முதல் குமரிக் கடல் வரை விதர்பா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளது. இதனால் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை நேற்று பெய்துள்ளது. இன்றும் நாளையும் இது நீடிக்கும். மேலும், 30ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மே 1, 2ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related Stories: