வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்டமேற்படிப்பு, முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டமேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடந்து வருகிறது.
பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகளுக்கு 2026-27ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2 முடித்த விருப்பமுள்ள மாணவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தங்கும் விடுதி வசதி இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டும்.

விண்ணப்பங்கள் கடந்த 20ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 18ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்ப கட்டணம் – ரூ.200. எஸ்.சி.,எஸ்டி – ரூ.100/- (சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்) மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், மின்வாரியசாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ பின்புறம்) அம்பத்தூர், சென்னை-600098. தொலைபேசி எண். 044 – 29567885 / 29567886. Email: tilschennai@tn.gov.in தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: