அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, பிப்.25: சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களை தாக்கிய காவல்துறையினரை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கடந்த 17ம் தேதி முதல் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று 8 வது நாளாக தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர்.இந்நிலையில், சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது திடீரென காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதில் பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் செந்தூர் ராஜன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் விளக்கவுரை ஆற்றினார். இதில், மாவட்ட துணைத்தலைவர்கள் ஞானராஜ், அண்ணாமலை பரமசிவன், காவல்துறை நிர்வாக அலுவலர் சங்கம் பேச்சியம்மாள், வணிக வரித்துறை ராமலெட்சுமி, தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>