தம்பதி, குழந்தைகள் மீது மோதிய டூவீலர்

சிவகாசி, ஏப். 25: சிவகாசி அருகே டூவீலர் மோதியதில் தம்பதி 2 குழந்தைகளுடன் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி(46). இவர் கோவையில் வேலை செய்து வருகிறார். தேர்தலுக்காக சொந்த ஊர் வந்த கருப்பசாமி தனது மனைவி அழகுலட்சுமி, மகள்கள் பவதாரணி, மகாலட்சுமி ஆகியோருடன் டூவீலரில் எம்.சுப்புலாபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் மோதியதில் கருப்பசாமி மற்றும் மனைவி, மகள்கள் படுகாயம் அடைந்தனர். சம்பவம் குறித்து விபத்திற்கு காரணமான மதுரை பேரையூர் தாலுகாவை சேர்ந்த காமாட்சிநாதன்(எ) ஆனந்த்(25) என்ற வாலிபர் மீது எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: