திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

திருவாரூர், பிப்.24: மாத உதவித் தொகை ரூ.3 ஆயிரம் வழங்க கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். கடும் ஊனம் அடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ.5 ஆயிரமும், மற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசுத்துறைகளில் 4 சதவிகித வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்பதுடன் இதுவரையில் வழங்கப்பட்ட வேலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பில் 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்திற்குள் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் சந்திரா உட்பட 20 பேரை தாலுகா போலீசார் கைது செய்து காட்டூரில் உள்ள சமுதாய கூடம் ஒன்றில் தங்க வைத்து பின்னர் விடுதலை செய்தனர்.

Related Stories: