ஜன நாயகன் லீக் எடிட்டர் சஸ்பெண்ட்

சென்னை: விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் கசிந்தது. தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரில், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரை பிடித்து விசாரித்தனர். ‘ஜன நாயகன்’ பட பகுதிநேர எடிட்டர் ஒருவர் மூலமாகபடம் இணையத்தில் கசிந்தது தெரியவந்தது. எடிட்டர் பிரதீப் இ.ராகவ் கவனக்குறைவே இதற்க் காரணம் என தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் இ.ராகவ் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவரை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் இடைநீக்கம் செய்துள்ளது. அவருக்கு சங்கம் எந்த ஒத்துழைப்பும் வழங்காது’ என்று கூறியுள்ளது.

Related Stories: