மேட்டூர்: தமிழக- கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து, நேற்று 4வது நாளாக விநாடிக்கு 1,500 கனஅடியாக நீடித்தது. அதேசமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 739 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,079 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 80.77 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 80.71 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 42.66 டிஎம்சியாக உள்ளது.
