சாத்தூர்: சாத்தூர் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ் வீட்டில் 122 பவுன் நகைகள் கொள்ளையடித்த வழக்கில் முதுகுளத்தூரை சேர்ந்தவர் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ் போட்டியிட்டார். இவரது வீட்டின் மாடியில் மகன் விக்னேஷ், அவரது மனைவி வத்சலாதேவி வசிக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான 122 பவுன் நகை, ரூ.45 ஆயிரத்தை முகமூடி அணிந்த மூன்று மர்மநபர்கள் கடந்த 12ம் தேதி திருடிச் சென்றனர். இது தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நகை கொள்ளை தொடர்பாக சாத்தூர் குற்றவியல் நடுவர் எண்-2 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் வரதராஜன் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் கடரேந்தலை சேர்ந்த ஆரோக்கிய ஜான் போக்ஸ்கோ(41) என்பவர் நேற்று சரணடைந்தார். மாஜிஸ்திரேட் உத்தரவின்படி அவரை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
