விழுப்புரம் நாதக வேட்பாளரான மனைவிக்கு ஓட்டு போட்ட படம் ஸ்டேட்டஸில் வைத்த கணவர்

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்த நிலையில் வேட்பாளர் அபிநயாவின் கணவர் பொன்னிவளவன் தன் மனைவிக்கு வாக்களித்ததை புகைப்படம் எடுத்து தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல்வேட்பாளராக உள்ள அபிநயாவின் சின்னத்தில் பொத்தானை அழுத்தும் புகைப்படத்தை எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளாராம். தற்போது இந்த புகைப்படம் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் விவிபேட் இயந்திரத்தில் வரும் நாம்தமிழர் கட்சி வேட்பாளரின் சின்னத்தையும் விவிபேட் இயந்திரத்துடன் புகைப்படம் எடுத்து ஸ்டேட்டசில் வைத்துள்ளார். வேட்பாளர் அபிநயாவின் கணவர் பொன்னிவளவன் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது.

Related Stories: