கொல்லங்கோடு அருகே செம்மண் கடத்திய டெம்போ சிக்கியது

நித்திரவிளை, ஏப்.25: கொல்லங்கோடு அருகே வயல் வெளியில் செம்மண்ணை கடத்தி வந்து கொட்டிய ெடம்போவை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கொல்லங்கோடு அருகே பியூலா நகர் பகுதியில் உள்ள வயல் வெளியில் செம்மண் கொட்டுவதாக கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் வயல்வெளியில் செம்மண்ணை கொட்ட வந்த டெம்போவை மடக்கி பிடித்தனர். டெம்போவை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் சந்தனபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் ராஜ் (45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: