நாகர்கோவில், ஏப்.25 : புதுக்கடை எஸ்.ஐ கார்த்திக், கடந்த 23ம்தேதி மதியம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி அருகே ேராந்து பணியில் இருந்தார். அப்போது காப்புக்காடு அருகே உள்ள களப்பாறை பகுதியை சேர்ந்த ரமேஷ் (44), மாடன்கண்ணுவிளை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (36) ஆகியோர் வாக்காளர்களுக்கு இடையூறு செய்தனர்.அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு எஸ்.ஐ கூறினார். ஆனாலும் இவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல வில்லை. இதையடுத்து எஸ்.ஐ. கார்த்திக், புகாரின் பேரில் போலீசார் மேற்கண்ட 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
புதுக்கடை அருகே வாக்காளர்களுக்கு இடையூறு செய்த 2 பேர் கைது
- முதுகாடி
- நாகர்வில்லே
- முதுக்கடை எஸ். ஐ கார்த்திக்
- புனித அந்தோணி உயர்நிலைப்பள்ளி
- ரமேஷ்
- களபரரா
- கபுக்காட்
- செந்தில்குமார்
- மதங்கனாவில்லே
