திருஈங்கோய் மலை மரகதாசலேஸ்வரர்

பிருகுமுனிவர் சிவபெருமானை வணங்கும் வழக்கம் உடையவர். அம்பாள் வழிபாட்டை என்றுமே செய்யாதவர். அன்னையின் முக்கியத்துவம் பக்தர்களுக்கும் தெரிய வேண்டும் என சிந்தித்தார். தனது திருவிளையாடலை தொடங்கினார். அம்பாளை கோபப்படும்படி செய்தார். அம்பாள் பூலோகத்தில் வந்து தவம் செய்தாள். அந்த தவத்தின் வலிமை காரணமாக சிவபெருமான் தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக உறுதி அளித்தார். ஆதிசேஷனுக்கும் – வாயுவிற்கும் தங்களில் யார் பெரியவர்கள் என்ற போட்டி ஏற்பட வாயுபகவான் பலமாக காற்றை வீசச் செய்தார். ஆதிசேஷனும் மந்திர மலை இறுக சுற்றிக் கொண்டார். அச்சமயம் அந்த மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு பூமியில் விழுந்த பகுதியில் ஒன்றே திரு ஈங்கோய் மலை ஆகும். சிவபெருமான் அவர்களை சமாதானம் செய்து அந்த மலையில் மரகத லிங்கமாக எழுந்தருளினார். மரகத அசலத்தில் (அசலம் – மலை) எழுந்தருளியதால் மரகதாசலேஸ்வரர் என்ற திருநாமமும், திரணத்ஜோதீஸ்வரர் என்ற திருநாமமும் பெற்றார்.

அகத்திய மாமுனிவர் ஈ வடிவாக இறைவனை தரிசித்தமையால், திரு ஈங்கோய் மலை என்றழைக்கப்படுகிறது. காலைக்கடம்பர், மத்தியாச்சொக்கர், அந்திஈங்கோய்நாதர் ஆகிய தலங்களை காலையிலும் ஐயர்மலை மதியப் பொழுதிலும் ஈங்கோய் மலையை மாலையிலும் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு. அம்பாள் சிவனை வழிபட்ட திருத்தலம் என்பதால் சிவசக்தி மலை என்றும் அழைக்கப்படுகிறது. மரகத நாதர் என்னும் திருநாமத்திற்கு என்றவாறு சிவலிங்கம் பச்சை மாமலை போலப் பளபளக்கும் பச்சை வண்ணத்தை கொண்டுள்ளது. இது பாடல் பெற்ற திருத்தலமாக உள்ளது.திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலமாகும்.
இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், சந்திரன், புதன், சுக்ரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது.
*மாசி மாதம் வரும் பௌர்ணமிநாளில் மூன்று தலங்களையும்தரிசித்துவழி படும் அன்பர்கள்நவகிரக தோஷத்திலிருந்தும்நாகதோஷத்திலிருதும் விடுபடுவார்கள்.
* ஜாதகத்தில் ஐந்தாம்(5ம்) அதிபதி பாதிக்கப்பட்டிருந்தால் குழப்பமான மனநிலை மற்றும் மன ரீதியான சில சிக்கல்களும் உண்டு. குழந்தைகளுக்கு ஆட்டிசம் போன்ற குறைபாடும் ஏற்படும். இது தொடர்பான அமைப்புகள் உள்ளவர்கள் சித்ரா பௌர்ணமி நாளில் சுவாமி தரிசனம் செய்து எள்ளுருண்டை சுவாமிக்கு நைவேத்யம் செய்து அதனை அங்கு வரும் பக்தர்களுக்கு கொடுத்து, ஓர் இரவு தங்கி சென்றால் ஆட்டிசம் போன்ற பிரச்னைகளிலிருந்து தீர்வுகள் உண்டாகும்.
* சந்திரன் 5ம் பாவகத்தில் நீசமானால் சில குழப்பங்கள் வாழ்வில் ஏற்படுவதுண்டு. இவர்கள் புரட்டாசி மாதம் வரும் பௌர்ணமி நாளில் அல்லது திருவோணம் நட்சத்திர நாளில் இங்கு இறைவனை வழிபட்டு தங்கி சென்றால் குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும்.
* வெள்ளிக்கிழமை வரும் பௌர்ணமி நாளில் செந்தாமரை மலரில் மாலை கொடுத்து கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி கருப்பு நிற பசுவிற்கு உணவு அளித்தால் குபேர சம்பத்து உண்டாகும்.

Related Stories: