மயிலாடுதுறை அருகே மணல்மேடு அரசு பள்ளியில் பெஞ்ச், டெஸ்க் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

மயிலாடுதுறை, பிப்.24: மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நலைப்பள்ளியில் மாணவர்கள் அமருவதற்கு பெஞ்ச் வசதி இல்லாமல் உள்ளனர். இதற்கு உடனே நடவடிகை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் முன்னாள் கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கோரிகை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மணல்மேடு பேரூராட்சியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேநிலைப்பள்ளி உள்ளது, இதில் ஆண்கள் மேல்லைநப்பள்ளியில் 478 மாணவர்கள் பயிலுகின்றனர். 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பெஞ்ச் மற்றும் டெஸ்க் வசதி உள்ளது. மீதி இருக்கின்ற பெஞ்ச் டெஸ்க்குகள் துருபிடித்து பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் மாணவர்களை தரைலயில் அமர வைத்து பாடம் நடத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இது மிகவும் வேதனையாக உள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள், எனவே மாவட்ட கலெக்டர் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து மாணவர்களுக்குத் தேவைப்படும் 150 பெஞ்ட் மற்றும் டெஸ்க் வசதி செய்துதர வேண்டும். மேலும் புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டி ஒப்படைப்பு செய்யும்போது கூடுதலாக பெஞ்ட் டெஸ்க் தரவேண்டும் என்ற நடைமறையும் பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை, மணல்மேடு அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான பெஞ்ச், டெஸ்க்க்குகள் பயன்படுத்தப்படாமல் புதியதாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதையாவது தற்காலிகமாக மாற்றித்தர வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: