தேர்தல் முடிவுகளுக்கு பின் நடிகர் விஜய்யுடன் கூட்டணியா.!! பாஜக தேசிய தலைவர் பரபரப்பு பேட்டி

டெல்லி: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், புதிதாக வந்திருக்கும் நடிகர் விஜயால் அரசியல் களத்தில் பெரிதாக தாக்கம் எதையும் ஏற்படுத்த முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

நடிகர் விஜயின் கட்சியான தவெக தமிழகத்தில் தனது முதல் தேர்தலைச் சந்தித்து வரும் நிலையில், நடிகரிலிருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயுடன் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கூட்டணி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் எதுவும் இல்லை என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.

தொடர்ந்து பேசிய நிதின் நபின், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். விஜய் உடனான கூட்டணி எங்களுக்குத் தேவைப்படாது. அதற்கான அவசியமே இருக்காது. தமிழ்நாட்டில் நாங்கள் NDA கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறினார். விஜய் அரசியலுக்குப் புதியவர் என்று குறிப்பிட்டதுடன், அரசியலில் முதன்முறையாகக் களமிறங்குபவர்கள் தாக்கம் ஏற்படுத்த பொதுவாக சிறிது காலம் பிடிக்கும் என குறிப்பிட்டார்.

நடிகர் விஜய்க்கு அரசியலில் இது ஒரு தொடக்கமே தவிர, புதிதாகக் களமிறங்கும் எவராலும் உடனடியாக பெரிய அளவிலான தாக்கத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்திவிட முடியாது என்று கூறினார். தமிழகத்தில் எங்களது கூட்டணி மிகவும் வலிமையான ஒன்றாகும். நாங்கள் ஒரு முழுமையான கூட்டணி; எனவே, வேறு யாருடைய ஆதரவும் எங்களுக்கு தேவைப்படாது என்று மீண்டும் வலியுறுத்தி கூறி இருக்கிறார் நிதின் நபின். தமிழகத்தை பொறுத்த வரை NDA கூட்டணையின் பலம் அதன் தற்போதைய கூட்டணிக் கட்டமைப்பிலேயே உறுதியாக இருப்பதாக பாஜக தலைவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டணியானது நிலையானதாகவும், தேர்தல் களத்தில் கடும் போட்டித்தன்மை கொண்டதாகவும் இருப்பதாகவும் கூறினார். எனவே எங்களுக்கு வேறு யாருடைய ஆதரவும் தேவைப்படாது,” என்று கூறிய அவர், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை மீண்டும் குறிப்பிட்டார்.

Related Stories: