தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் காலை 11 மணி வரை 37.56% வாக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

தேர்தலில் காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 32.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை அண்ணாநகரில் அதிகபட்சமாக 36.07%-மும், குறைந்தபட்சமாக திருவிக நகரில் 31.37% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

அண்ணா நகர் – 36.70%

சேப்பாக்கம் – 34.44%

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – 35.71%

எழும்பூர் – 34.40%

துறைமுகம் – 34.39%

கொளத்தூர் – 37.06%

மயிலாப்பூர் – 31.55%

பெரம்பூர் – 36.26%

ராயபுரம் – 31.71%

சைதாப்பேட்டை – 34.38%

திருவிக நகர் – 31.37%

தியாகராய நகர் – 39.08%

ஆயிரம் விளக்கு – 35.69%

வேளச்சேரி – 37.18%

வில்லிவாக்கம் – 36.92%

விருகம்பாக்கம் – 39.39%

Related Stories: