ஓசூர் மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு

ஓசூர், பிப்.24:ஓசூர் மாநகரில் 66 கண்காணிப்பு கேமராக்களை ஓசூர் எம்எல்ஏ சத்யா கலந்து கொண்டு திறந்து வைத்தார்.ஓசூர் மாநகரில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும், விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. ஓசூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹19.48 லட்சம் மதிப்பில் ஓசூர் நகரில் உள்ள ரிங்ரோடு, காந்திரோடு, நேதாஜி ரோடு என முக்கிய சாலைகளில் 66 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களை ஓசூர் எம்எல்ஏ சத்யா பொது மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோரமணி, மாநகர அவைத்தலைவர் கருணாநிதி, மத்திகிரி முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவிகுமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முல்லை சேகர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மகேஷ் பாபு, மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுமன், கிளை நிர்வாகிகள் ராஜாராம், தேவராஜ், மோகன், இதயத், ரவிச்சந்திரன், அமல்ராஜ், குணசேகரன், ஜாகிர், தேவாஅன்பு, சேகர், வேணுகோபால், கிருஷ்ணன், பாஸ்கர், அருள் மகிமைதாஸ், பாலு, சுரேஷ், சீனிவாசன், நாகராஜ், தொழில்நுட்ப அணி மஞ்சுநாத், இளைஞர் காங்கிரஸ் பிரவின்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>