மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

போச்சம்பள்ளி, பிப்.24: மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ₹5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறைகளிலும் 5 சதவீதம் வேலை வாய்ப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போச்சம்பள்ளி தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். அண்ணாமலை, கோட்டீஸ்வர், முருகன், பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் பெரியசாமி போராட்டம் குறித்து பேசினார். வெண்ணிலா, செந்தாமரை, செல்வி, பலரமான், கலீம், பட்டாதுரை, ராஜா, மரகதம், பழனியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேப்பனஹள்ளி:வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது முறையாக போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9ம் தேதி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து, தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், இதுவரை கோரிக்கைகளை பரிசீலிக்காததால் நேற்று மீண்டும் வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்ததால் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: