புளியங்குடி ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து

புளியங்குடி, ஏப்.22: புளியங்குடி காந்தி பஜாரில் உள்ள ஒரு பிரபல ஜவுளி கடையின் 2வது மாடியில் நேற்று இரவு 9:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ஊழியர்கள் கீழே இறக்கினர். பின்பு அருகில் இருந்த கடைக்காரர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்க முற்பட்டனர். தொடர்ந்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இதில் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள துணிகள் சேதம் அடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: