மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிறிஸ்தவ ஆதிதிராவிடர் நல இயக்கம் ஆதரவு மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு

நாகர்கோவில், ஏப். 22 : குமரி மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிறிஸ்தவ ஆதிதிராவிடர் நல இயக்கும் ஆதரவு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஆதிதிராவிடர் நல இயக்கத்தின் மாவட்டகுழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். மேஜர் பொன்னப்பன், அப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி ஜேக்கப் வரவேற்றார். பொருளாளர் ஆசீர் பீட்டர், நிர்வாகிகள் ஞானதாஸ், சுகுமாறன், ஆசீர், சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவு வழங்குவது, நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி ேவட்பாளர் ஆஸ்டின், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மகேஷ் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி ஜார்ஜ் நன்றி கூறினார்.

Related Stories: