*ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கான 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு வானூர், விழுப்புரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்.
விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையமான விழுப்புரம் கா.குப்பம் பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்வதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையமான திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியிலும், வானூர், விழுப்புரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையமான விழுப்புரம் கா.குப்பம் பல்கலைக்கழக பொறியியல் உறுப்புக்கல்லூரியிலும் வாக்கு எண்ணுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அதன்படி தற்போது வானூர், விழுப்புரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் கா.குப்பம் பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வழிகள், வாக்கு எண்ணும் பகுதியில் முகவர்கள், அலுவலர்களுக்கான இருக்கை வசதிகள், சுகாதாரமான குடிநீர் வசதிகள், மின்விசிறி வசதிகள், ஒலிபெருக்கி வசதிகள், தடையில்லா மின்சார வசதி, கூடுதலாக ஜெனரேட்டர் வசதி, தீயணைப்பு கருவி வசதிகள், தேர்தல் பார்வையாளர் அறைகள், மாவட்ட தேர்தல் அலுவலர், முகவர்கள் அறை, காவலர்கள், ராணுவத்தினர் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, தொலை தொடர்பு வசதி, இணையதள வசதி, கண்காணிப்பு கேமரா வசதி, வாக்குச்சாவடி மையம் கண்காணிப்பு அறை, தொலைக்காட்சி இணையதள வசதி, கணினி வசதியுடன் கூடிய செய்தியாளர் அறை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது எஸ்.பி. சாய்பிரனீத் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
