பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த மஞ்சள் அட்டை பயன்படுத்த வேண்டும்

*விவசாயிகளுக்கு ஆலோசனை

கந்தர்வகோட்டை : பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த மஞ்சள் அட்டைகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பருத்தி பயிரில் பூச்சி தாக்குதலை இயற்கை முறையில் செலவே இல்லாத முறையில் மஞ்சள் வண்ண அட்டைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். இதனை பயன்படுத்துவது பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு மிகவும் உதவும் எளிய, சுற்றுச்சூழல் நட்பான முறையாகக் கருதப்படுகிறது.

வெள்ளை ஈக்கள், அசுவினி பூச்சி, இலைப்பேன், தத்துப் பூச்சி, பச்சை பூச்சி போன்ற சாறு-உறிஞ்சும் பூச்சிகள் மஞ்ச நிறத்தை கவர்ந்திழுக்கும் வண்ணத்தால் அட்டையில் ஒட்டி இறக்கின்றன.
இவை பருத்திச் செடியில் இருந்து சாற்றை உறிஞ்சி இலைகள் மஞ்சள் நிறமாக மாறவும், வளர்ச்சி தாமதமாகவும், வைரஸ் நோய்கள் பரவவும் காரணமாகின்றன.

இவற்றை கட்டுப்படுத்துவதால் இந்த பிரச்சினைகள் குறைகின்றன. குறைந்த செலவில் எளிதாக தயாரிக்கப்பட்டு, வேதிப்பூச்சிக்கொல்லி அளவை குறைக்க உதவும். இது இயற்கை மற்றும் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளுக்கு ஏற்றது.

இவை பூச்சிகளின் இனப்பெருக்கத்தை குறைத்து, பயிர்ச் சேதத்தையும், வைரஸ் நோய்களின் பரவலையும் கட்டுப்படுத்துகின்றன. இதன் மூலம் பருத்தியின் மகசூல் திறன் மேம்படுகிறது. பயிர் கிடைமட்டத்துக்கு ஏற்றவாறு அட்டைகளை 10-15 செ.மீ. உயரத்தில் காற்று வீசும் திசைக்கு இணையாக மாட்ட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு சுமார் 20 முதல்25 அட்டைகளை ஒழுங்காக வயலில் சிதறிய வடிவில் வைத்து, 10-15 நாள்களுக்கு ஒரு முறை பூச்சிகளை நீக்கி மீண்டும் ஒட்டு பசை தடவி பயன்படுத்தலாம்.

இதன் மூலம் சுற்றுப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் இன்றி கருத்து பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும். எனவே விவசாயிகள் பருத்தி பயிரில் மஞ்சள் வண்ண அட்டைகளை பயன்படுத்தி பூச்சி தாக்குதலை முழுமையாக தடுக்கலாம் என்று வட்டார வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Related Stories: