புளியங்குடி, ஏப்.21: புளியங்குடியில் கண்ணா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி கடந்த 14 வருடங்களாக இயங்கி வருகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் மகா ராஜேஸ்வரன் 487/500 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். மாணவி சிவநந்திதா 483 மதிப்பெண் பெற்று 2ம் இடம் பிடித்தார். தொடர்ந்து 8வது முறையாக மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது தனி சிறப்பு. தமிழ், அறிவியல், வரலாறு ஆகிய பாடங்களில் 4 மாணவர்கள் 100/100 பெற்றுள்ளனர். 95 மதிப்பெண்களுக்கு மேல் தமிழில் 25 மாணவர்களும், ஆங்கிலத்தில் 11 மாணவர்களும், கணிதத்தில் 2 மாணவர்களும், அறிவியலில் 8 மாணவர்களும் வரலாறில் 6 மாணவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். இண்டகிரேட்டட் நீட், ஐஐடி, ஜேஇஇ வகுப்புகள், 6 முதல் 12ம் வகுப்பு வரை நடைபெற்று வருகிறது. தற்போது பிளஸ்1 வகுப்புகளுக்கான அட்மிஷன் நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சேர்மன் டாக்டர் பிரகாஷ் கண்ணா, தாளாளர் டாக்டர் லக்ஷ்மிபிரியா, முதல்வர் பிரேமா சரவணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி கேடயம் வழங்கி கௌவிரவித்தனர்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் புளியங்குடி கண்ணா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம்
- புளியங்குடி கண்ணா சர்வதேச பள்ளி
- சிபிஎஸ்இ
- Puliyangudi
- கண்ணா சர்வதேச சிபிஎஸ்இ பள்ளி
- மகா ராஜேஸ்வரன்
- சிவானந்திதா
