உடன்குடியில் போலீசார் அணிவகுப்பு

உடன்குடி, ஏப். 21: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் உடன்குடி சந்தையடித் தெருவில் குலசேகரன்பட்டினம் மற்றும் ராஜஸ்தான் போலீசார் என மொத்தம் 50 பேர் கலந்து கொண்ட அணிவகுப்பு பேரணி நடத்தினர். பேரணிக்கு குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன் தலைமை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா முன்னிலை வகித்தார். பேரணி உடன்குடி பஸ் நிலையம், வில்லிகுடியிருப்பு, மெயின் பஜார், வடக்கு பஜார், கூலத் தெரு, காலங்குடியிருப்பு வழியாக சந்தையடித் தெருவை வந்தடைந்தது. பேரணியில் அனைவரும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: